×

ஒடிசா ரயில் விபத்து, மாயமான ஜூனியர் என்ஜினீயர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைப்பு!

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்து தொடர்பான வழக்கில் தொடர்புடைய் சோரா செக்சன் ரயில்வே சிக்னல் ஜூனியர் என்ஜினீயர் குடும்பத்துடன் தலைமறைவான நிலையில், அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், இதுவரை 291 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம்டைந்தனர்.

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சோரா செக்சன் ரயில்வே சிக்னல் ஜூனியர் என்ஜினீயர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ரயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சீல் வைத்துள்ளனர். கடந்த 16-ம் தேதி சிபிஐ அதிகாரிகள் பாலசோர் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று ஜூனியர் என்ஜீனியர் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு நேற்று சென்றபோது, அவர் இல்லாததால் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்து, மாயமான ஜூனியர் என்ஜினீயர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைப்பு! appeared first on Dinakaran.

Tags : odisha train accident ,cpi ,Odisha ,Sora Sexon ,Railway Signal ,Junior Engineer ,train ,Odisha Rail ,Dinakaran ,
× RELATED “ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக...